நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் இல்லை!அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் இல்லை என்றும் கால்நடைதுறை மூலமாக இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நடைபெற்ற கால்நடை பராமரிப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அவர் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் செலவில் 100 சிறு கால்நடை பண்ணைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
நடப்பு ஆண்டில் 12000 பேருக்கு விலை இல்லா கறவை பசுக்களும், ஒன்றரை லட்சம் பேருக்கு 6 லட்சம் வெள்ளாடுகளும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விலை இல்லா கறவை பசுக்கள் மூலம் 2 புள்ளி 66 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், செயற்கை கருவூட்டல் சேவை தரத்தை மேம்படுத்த 2 புள்ளி 17 கோடி ரூபாய் செலவில் 870 கால்நடை நிலையங்களுக்கு புதிய உபகரணங்கள் வழங்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.