திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,ஸ்டெர்லைட் ஆலை துவங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டமன்றத்தில் நாள் முழுவதும் விவாதிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவு அறைகுறையானது என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவையை கூட்டி, எந்த நீதிமன்றத்தாலும் தலையிட முடியாத தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார். ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது குறித்து, சட்டமன்றத்தில் நாள் முழுவதும் கூட விவாதிக்க திமுக உறுப்பினர்களும், தாமும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கு முதலமைச்சர் தயாரா என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…