நாளை விசாரணைக்கு வருகிறது போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்களின் முறையீட்டு வழக்கு!
தமிழகத்தில் இன்றுடன் ஆறாவது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை தொடர்ந்து இதன் வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என உயர் நீதி மன்ற நீதிபதி தெரிவித்துள்ளார் .
போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்த காரணம்பற்றி நீதிபதி மணிகுமாரிடம் முறையிட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை அரசு தராததால் பிரச்சனை நீடித்து வருகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி உத்தரவின்படி நீதிபதிகள் மணிகுமார், கோவிந்தராஜ் அமர்வு விசாரிக்கும் என தெரிவித்திருந்தார். போக்குவரத்து தொழிற்சங்க வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி தகவல் தெரிவித்தள்ளார்.
source: dinasuvadu.com