பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் வருவதால் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பரமக்குடி சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நாளை அவரது 61வது நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் அங்கு வருகை தரவுள்ளனர்.
எனவே பரமக்குடி முழுவதும் 75 கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இன்று நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கண்காணிப்பு பணியில் ட்ரோன் கமெராக்கள் பறக்கவிடப்பட்டது. இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கையில் 5 தாலுக்கா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, திருபுவனம் தாலுக்கா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை நள்ளிரவு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பரமக்குடிக்கு செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியில் இருந்து காளையார்கோயில், இளையான்குடி வழியாக சொந்த வாழுங்கள் பரமக்குடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
DINASUVADU
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…