நாளை தூத்துக்குடி செல்கிறேன், கர்நாடக செல்லவில்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர். ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து பார்த்தனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
நாளை தூத்துக்குடி செல்கிறேன், கர்நாடக செல்லவில்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நாளை தூத்துக்குடி செல்கிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.மேலும் தூத்துக்குடிக்கு திமுக சார்பில் குழு அனுப்பப்பட்டுள்ளது, அவர்கள் ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பார்கள் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தற்போது 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தலைமைச் செயலர் தெரிவித்தார் என்றும் கூறினார்.
நாளை கர்நாடகாவில் புதிய முதலமைச்சராக பங்கேற்கும் ம.ஜ. தளத்தின் குமாரசாமி பதவி ஏற்கிறார்.அதற்கு ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக அழைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வடக்கு-வடமேற்கு திசையில் வேகமாக நகர்ந்து சூறாவளி…
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…