நாளை தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

Default Image

புதன்கிழமை அன்று  தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த தேர்வை 10 லட்சத்து 1140 பேர் எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறார். தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்பேசிக்கு குறுந்தவலாக அனுப்பப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இதுதவிர மாணவர்கள் படித்த பள்ளிகளுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்ப படும் என்றும், அங்கு புதன்கிழமை அன்றே மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்வு முடிவுகளை WWW.dge.tn.nic.in  WWW.dge.tn.gov.inஆகிய இணையதளங்களிலும் பார்க்கலாம் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்