நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இருவர் மீது அவதூறு  புகார் !

Default Image

சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சமூகவலைதளங்களில் அவதூறு  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள் மீது,நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகம் சீமானின் தம்பி, ஆர்.சௌந்தர்ராஜன் ஆகிய இரண்டு பேர், சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.

‘பல்வேறு தலைவர்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்றனர் என, தந்தி டி.வி, புதிய தலைமுறை தொலைக்காட்சி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ஆகிய தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்தி வெளியிட்டதுபோல ஒரு காட்சிப் படத்தை, இவர்களே போலியாக வரைந்து, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார்கள். அந்தப் பட்டியலில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பெயரும் இடம் பெற்று உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதற்காகப் பல்வேறு அறப்போராட்டங்கள், பேரணி, நீதிமன்றப் போராட்டம் என்று இன்றுவரை தொடர்ந்து போராடி வருகின்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் குறித்து, பொய்யான, அவதூறான, நன்மதிப்பைக் கெடுக்கின்ற வகையிலான செய்திகளை முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்து, பொதுமக்கள் மனதில் வைகோ அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகின்ற வகையில் பரப்பி வருகின்றார்கள்.

மேற்கண்ட இருவர் மீதும், இவர்களைப் போல, சமூக வலைதளங்களில் போலியான செய்திகளை வெளியிடுபவர்கள் மீதும், குற்றத் தடுப்புச் சட்டப்படியும், இந்திய தண்டனைச் சட்டப் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சார்பில் கழக வழக்கறிஞர்கள் நன்மாறன், பிரியகுமார், செந்தில்செல்வன், வினோத்குமார் ஆகியோர் இன்று மாலை 4 மணி அளவில், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்