நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதிமுக-நாம் தமிழர் கட்சியினரிடையே திருச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில், வைகோ, சீமானை வரவேற்க திரண்டிருந்த மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களிடையே மோதல் வெடித்தது. திருச்சி மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கூடுவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த 6 பேரை திருச்சி ஏர்போர்ட் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோல நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில், மதிமுகவை சேர்ந்த வெல்லமண்டி சோமு உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.