லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்,நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த 25 அதிகாரிகள் நேற்று மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 30க்கும் மேற்பட்ட அலுவலர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் மற்றும் பணியில் இருந்தவர்களிடம் உரிய கணக்கு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று மாலை தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை இன்று அதிகாலை வரை நீடித்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…