நாமக்கல்லில் சார் பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல் வந்து பணம் பறிக்க முயற்சி!
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் போல், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சார் பதிவாளரிடம் நடித்து பணம் பறிக்க முயன்றவர்களை போலிசார் கைது செய்தனர். ராசிபுரம் சார் பதிவாளர் இந்துமதியிடம், மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி விஸ்வநாதன் என்ற அறிமுகத்தோடு, அரசு வாகன வசதி செய்து தராததால் தனியார் வாகனத்தை பயன்படுத்தி வருவதாகவும் வாகன செலவுக்காக தன்னுடைய ஓட்டுனரிடம் 5 ஆயிரம் பணம் கொடுத்து அனுப்புமாறும் கூறியுள்ளார்.
பணத்தை வாங்க மாலை சார் பதிவாளர் அலுவலகம் வந்த நபர், இந்துமதியிடம், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி விஸ்வநாதன் பணம் வாங்கி வரச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த இந்துமதி கொடுத்த தகவலையடுத்து வந்த ராசிபுரம் காவல்துறையினர் சேலத்தைச் சேர்ந்த யூனுசை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி என்று கூறிய பாஸ்கரும் கைது செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.