நான் ரஜினியின் தீவிர ரசிகன்! காலா படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்!அமீர்கான் வெயிடிங் காலா
கடந்த 2016ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து இவர்களின் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘காலா’. இதனை நடிகர் தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரித்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள அனைத்து படங்களுக்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே காலா படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் காலா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் காட்சிகள் உருவான விதம் குறித்த மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவை ரசிகர்களிடையே காலா படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படம் குறித்த ரஜினிகாந்த் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரின் பேச்சு காலா படத்திற்கான எதிர்பார்ப்பை இருமடங்காக்கியது.
இன்று படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் காலா படம் குறித்து அமீர்கான் ஒரு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/aamir_khan/status/1004577908034174977
இது குறித்து நடிகர் ஆமீர் கான் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் கூறியதாவது, நான் ரஜினியின் தீவிர ரசிகன்; காலா படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன் என்று பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.