நான் பேசியதை நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை – எடப்பாடி பழனிசாமி

Default Image

விருத்தாச்சலம் சிறுமி வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 13 மணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார் என ஈபிஎஸ் குற்றசாட்டு.

ஈபிஎஸ் பேட்டி 

சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்யாத காரணத்தினால் அதிமுக வெளிநடப்பு செய்தனர். அதன்பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

 

அப்போது பேசிய அவர் விருத்தாச்சலம் சிறுமி வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 13 மணி நேரம் கழித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  இரவில் பெற்றோர் புகார் அளித்த நிலையில், காலை வரை எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.

இந்த பிரச்சனையில் தொடர்புடைய ஆளும் கட்சி நபரை காப்பாற்ற திமுக அரசும் முயற்சி செய்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சிறுமிக்கு ஏற்பட்ட நிலை குறித்து பேரவையில் நான் பேசியதை நேரலையில் ஒளிபரப்பவில்லை. கேள்வி கேட்பதை ஒளிபரப்பாமல் பதிலை ஒளிபரப்புகிறார்கள்.

எனக்கு முன்பும், பின்பும் பேசியவர்களின் பேச்சு நேரலை செய்யப்பட்டது; எனது பேச்சை நேரலை செய்யவில்லை சட்டமன்றம் எங்கே ஜனநாயக முறைப்படி நடக்கிறது?   பேரவை நடுநிலையாக செயல்படவில்லை சபாநாயகர் ஆளும் கட்சி கண்ணசைவில் ஏற்ப செயல்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்