” நான் தலைவன் அல்ல ” முக அழகிரி அறிக்கை..!!
தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி மறைந்து முப்பது நாட்கள் ஆனதையொட்டி சென்னையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் பேரணி ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார் அவரது மூத்த மகன் மு.க. அழகிரி. ஒரு லட்சம் பேர் பங்கேற்பதாகச் சொன்ன பேரணியில் சுமார் பத்தாயிரம் பேர் மட்டுமே பங்கேற்றனர்.
கடந்த சில நாட்களில் இந்தப் பேரணிக்காக அழகிரி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியபோது, பேரணிக்குப் பிறகும் கட்சியில் சேர்க்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோதெல்லாம், செப்டம்பர் ஐந்தாம் தேதியன்று அறிவிப்பேன் என்று கூறிவந்தார் அழகிரி. இதனால், பேரணி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் நீண்ட நேரம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்ததோடு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மட்டுமே இந்தப் பேரணி என்று தெரிவித்தார். அவரது ஆதரவாளரான வேளச்சேரி ரவி என்பவரை கட்சியைவிட்டு நீக்கியிருக்கிறார்களே என்று கேட்டதற்கு, இந்தப் பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களையும் நீக்குவார்களா என அவர்களிடமே கேளுங்கள் என்று சொல்விட்டுச் சென்றுவிட்டார்..
முக அழகிரி பேரணி இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகியும் அழகிரி தரப்பில் இருந்து எவ்வித நடவடிக்கையும் நடைபெறவில்லை.இந்நிலையில் இன்று முக.அழகிரி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில்
நான் தலைவன் அல்ல ,
ஒரு மேடை பேச்சாளன் அல்ல ,
‘ஒரு நடிகன் அல்ல’ என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர் அதில் என் தந்தையின் 30ஆவது நாள் நினைவு பேரணிக்கு கலந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என்று குறிப்பிட்டு இருந்தது.
DINASUVADU