நான் சொல்ற செட்டாப் பாக்சுகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும்!ஆபரேட்டர்களை மிரட்டிய திமுக எம்எல்ஏ!
திமுக எம்.எல்.ஏ. காந்தி வேலூரில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் செட் டாப் பாக்சுகளை பொருத்தச் சொல்லி மிரட்டுவதாக குற்றம்சாட்டிய தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்றது. அப்போது பேசிய கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள், தங்களை சுமங்கலி கேபிள் விஷன் என்ற தனியார் செட் டாப் பாக்சுக்கு மாறுமாறு கூறி ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் காந்தி மிரட்டுவதாக குற்றம்சாட்டினர். இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தை என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது
சுமங்கலி கேபிள் விஷனின் செட் டாப் பாக்சை எம்.எல்.ஏ காந்தி கேபிள் ஆபரேட்டர்களுக்கு வழங்கும் புகைபடங்களும் ஆதாரமாக வெளியாகி உள்ளது. ஆனால் அவர் தான் இது போன்று யாரையும் மிரட்டவில்லை என்று மறுத்துள்ளார்.