நான் காலேஜ் படிக்கும் போது தினகரன் எல்.கே.ஜி. படிச்சாரு …!துணை முதலமைச்சர் பகீர் தகவல்

Published by
Venu

நான் அ.தி.மு.க. யுனிவர்சிட்டியில் படிக்கும்போதுதான் தினகரன் எல்.கே.ஜி. படிக்க வந்தார் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.

பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தனது மனசாட்சி கேள்வி எழுப்பியதால்தான் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததாகவும், அவர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் பரபரப்பு தகவல்களைதெரிவித்தார்.

பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.

பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .

இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.

இந்நிலையில் நேற்று மன்னார்குடியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை-முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,

டி.டி.வி. தினகரன் மன்னார்குடியில் சிலநாட்களுக்கு முன்பு பேசிய நிலையில்  என்னை துரோகி என்று பேசினார். தினகரன் என்ன பெரிய தியாகியா? அ.தி.மு.க.விற்காக என்ன தியாகத்தை அவர் செய்துள்ளார்?.தினகரன் தான்  என்னை அறிமுகம் செய்தாராம்.மேலும் தினகரன் பெரியகுளம் வரும் முன்பே நான் நகர செயலாளர், நகராட்சி தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து விட்டேன். நான் அ.தி.மு.க. யுனிவர்சிட்டியில் படிக்கும்போதுதான் தினகரன் எல்.கே.ஜி. படிக்க வந்தார்.

ஜெயலலிதாவுடன் 33 வருடங்களாக  இருந்தோம் என்று கூறுகிறார்கள்.ஆனால்  இவர்கள்(சசிகலா குடும்பத்தினர்), அ.தி.மு.க.வை கைப்பற்ற சதி செய்ததை ஜெயலலிதா அறிந்து கொண்டதால்தான் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கினார்.

பின்னர் ஜெயலலிதா என்னை தனியாக அழைத்து நீங்கள் தினகரனிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளகூடாது. தொடர்பு கொள்ள எவ்வித முயற்சியும் செய்ய கூடாது என கட்டளையிட்டார்.
மேலும் தினகரனை நான் உயிருடன் இருக்கும் வரை வீட்டிற்குள்  நுழைய விடமாட்டேன் என ஜெயலலிதா கூறினார். தி.மு.க வால் ஜெயலிலதா மீது பழிவாங்க போடப்பட்ட 13 வழக்குகளில் தன்னை மட்டும் விடுவித்துக் கொண்டவர் தினகரன். அ.தி.மு.க வில் உரிமை கொண்டாடுவதற்கு இவர் யார்?. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே முதல்வராக தினகரன் சதி செய்தார்.

Published by
Venu

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

8 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

8 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

9 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

12 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

2 days ago