நான் காலேஜ் படிக்கும் போது தினகரன் எல்.கே.ஜி. படிச்சாரு …!துணை முதலமைச்சர் பகீர் தகவல்
நான் அ.தி.மு.க. யுனிவர்சிட்டியில் படிக்கும்போதுதான் தினகரன் எல்.கே.ஜி. படிக்க வந்தார் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தனது மனசாட்சி கேள்வி எழுப்பியதால்தான் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததாகவும், அவர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் பரபரப்பு தகவல்களைதெரிவித்தார்.
பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
இந்நிலையில் நேற்று மன்னார்குடியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை-முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,
டி.டி.வி. தினகரன் மன்னார்குடியில் சிலநாட்களுக்கு முன்பு பேசிய நிலையில் என்னை துரோகி என்று பேசினார். தினகரன் என்ன பெரிய தியாகியா? அ.தி.மு.க.விற்காக என்ன தியாகத்தை அவர் செய்துள்ளார்?.தினகரன் தான் என்னை அறிமுகம் செய்தாராம்.மேலும் தினகரன் பெரியகுளம் வரும் முன்பே நான் நகர செயலாளர், நகராட்சி தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து விட்டேன். நான் அ.தி.மு.க. யுனிவர்சிட்டியில் படிக்கும்போதுதான் தினகரன் எல்.கே.ஜி. படிக்க வந்தார்.
ஜெயலலிதாவுடன் 33 வருடங்களாக இருந்தோம் என்று கூறுகிறார்கள்.ஆனால் இவர்கள்(சசிகலா குடும்பத்தினர்), அ.தி.மு.க.வை கைப்பற்ற சதி செய்ததை ஜெயலலிதா அறிந்து கொண்டதால்தான் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கினார்.
பின்னர் ஜெயலலிதா என்னை தனியாக அழைத்து நீங்கள் தினகரனிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளகூடாது. தொடர்பு கொள்ள எவ்வித முயற்சியும் செய்ய கூடாது என கட்டளையிட்டார்.
மேலும் தினகரனை நான் உயிருடன் இருக்கும் வரை வீட்டிற்குள் நுழைய விடமாட்டேன் என ஜெயலலிதா கூறினார். தி.மு.க வால் ஜெயலிலதா மீது பழிவாங்க போடப்பட்ட 13 வழக்குகளில் தன்னை மட்டும் விடுவித்துக் கொண்டவர் தினகரன். அ.தி.மு.க வில் உரிமை கொண்டாடுவதற்கு இவர் யார்?. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே முதல்வராக தினகரன் சதி செய்தார்.