நான்கு தலைமுறைகளை கடந்த மூதாட்டியின் 104வது பிறந்தநாய்விழா கேக் வெட்டி கொண்டாட்டம்..!
வாடிப்பட்டியில் நான்கு தலைமுறைகளை கடந்த மூதாட்டியின் 104வது பிறந்தநாய்விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. வாடிப்பட்டி நீரேத்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜூப்பிள்ளை, திராவிடர் கழகத்தின் மூத்த முன்னோடியான இவரது மனைவி மீனாட்சியம்மாள். ராஜூப்பிள்ளை கடந்த சில ஆண்டுகள் முன் இறந்து விட்ட நிலையில் அவரது மனைவி மீனாட்சியம்மாள் நான்கு தலைமுறைகளை கடந்து 104 வயதாகியும் தனது மகன் பராமரிப்பில் நலமுடன் உள்ளார்.
அவரது 104வது பிறந்தநாள் விழா வாடிப்பட்டியில் விமர்சையாக கொண்டாடப்பட்டது, மூதாட்டியின் மகன், மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள் என அனைவரும் புடை சூழ கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய மீனாட்சியம்மாளுக்கு வண்ண மாலை, மலர் கிரீடம் மற்றும் மலர்களால் ஆன கதமும் வழங்கப்பட்டது. விழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று நான்கு தலைமுறைகளை கடந்த பாட்டியிடம் ஆசிபெற்று சென்றனர்