நான்காவது நாளாக பேராசிரியை நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களுக்காக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுக்கப்பட்டார். நாளையுடன் காவல் முடிவடைய உள்ள நிலையில், விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து அவரிடம் இன்று நான்காவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்றைய விசாரணையில் அவரது செல்போனில் அதிகம் பேசியவர்களை அழைத்து விசாரிக்கப்பட்டது. இன்றும் இதன் அடிப்படையிலேயே விசாரணை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. நிர்மலா தேவியுடன் அதிகமாக செல்போனில் பேசிய சிலரை சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.