சோபியாவின் கைதை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசையை விமானத்தில் வைத்து அவருக்கு எதிராக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார் சோபியா என்ற பெண்மணி எனவே சோபியா மீது நடவடிக்கை எடுக்க கோரி விமான நிலைய போலீசாரிடம் பாஜக தலைவர் தமிழிசைசவுந்தராஜன் மனு அளித்தார்.இதனையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் தமிழிசை முன் முழக்கமிட்ட சோபியாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் சோபியாவின் கைதை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ஜனநாயக விரோத கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்.பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…