நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்களுக்கு பயிற்சி
பெரியார் பல்கலைக்கழக நட்டு நலப்பணி திட்ட அலுவலர்களுக்கு, புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
துவக்கிவைத்து துணைவேந்தர் குழந்தைவேலு பேசியதாவது:
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் இரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை ஓராண்டுக்கு தத்தெடுத்து நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் மூலம்,சுகாதார பனி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுகதபாணிகளுடன் இணைந்து அம்மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.
தூய்மை பாரத இயக்கத்தை தனி நபர் இயக்கமாக செயல்படுத்தும் பணியில் மாணவ மாணவிகள் ஈடுபடுவர். இரண்டு நாட்கள் நடக்கும் பயிற்சியில் மின்னணு முறையில், பொது நிதி மேலாண்மைக்குறித்து விளக்கப்படுகிறது.