பார்வையற்ற நிலையிலும் ஐஏஎஸ் படித்து சாதனை படைத்த பிரஞ்ஜால் பாட்டீல், கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்ட பயிற்சி ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.பார்வையற்ற ஒருவர், அதிலும் பெண் அதிகாரி, மாவட்ட பயிற்சி ஆட்சியராக பொறுப்பேற்பது, நாட்டிலேயே இதுதான் முதல்முறையாகும். பிரஞ்ஜால் பாட்டீலை இந்த பதவிக்கு நியமித்ததன் மூலம், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு புதிய வழிகாட்டியுள்ளது.
கர்நாடக மாநிலம் உல்லாஷ் நகரை சேர்ந்தவர் என்.பி. பாட்டீல். பொறியாளர் ஆவார். இவரது மனைவி ஜோதி. இந்த தம்பதியின் மகள்தான் பிரஞ்ஜால் பாட்டீல். இவர் 2 வயதாக இருந்தபோது, காய்ச்சல் ஏற்பட்டு 2 கண்களிலும் பார்வை பறிபோனது.
2017-ஆம் ஆண்டு மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதிய அவர், இந்த முறை 124-ஆவது இடத்தைப் பிடித்தார். ஆட்சியர் ஆவதற்கு 124-ஆவது ரேங்க் போதுமானதாக அமைந்தது.
இந்நிலையில்தான், பிரஞ்ஜால் பாட்டீலை, கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட பயிற்சி ஆட்சியராக அம்மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு நியமித்துள்ளது. பிரஞ்ஜால் பாட்டீலும், பயிற்சி ஆட்சியராக திங்கட்கிழமையன்று எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.
முன்னதாக, தனக்கு ஊக்கமும், தைரியமும் கொடுத்து வளர்த்த தனது தாய்தான், தன்னை ஆட்சியர் இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார். அதிகாரிகளும் அதற்கு அனுமதியளித்தனர். அதன்படி அவரது தாய் ஜோதி, மகள் பிரஞ்ஜால் பாட்டீலை ஆட்சியர் இருக்கையில் அமர வைத்துள்ளார்.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…