நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கட்சி தொடங்கப்படும்!ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்,நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கட்சி தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளதால், அரசியலுக்கு எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து என்று குறிப்பிட்டார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புதிதாக பொறுப்பேற்கும் கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், அணைகளின் கட்டுப்பாடு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் இருந்தால் நல்லது என்றும் ரஜினி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.