காங்கிரஸ் தமிழகத்தில் பலமான கட்சியான திமுகவுடன் சேர்ந்து தொடர்ந்து செயல்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி பெங்களூருவில் சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் சென்றார்.இதன் பின்னர் பேசிய அவர் ,காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகி எங்களை அணுகினால் கூட்டணியில் சேர்வது குறித்து முடிவெடுப்போம்.நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்காது என்று கூறினார்.
இதற்கு பதில் கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,காங்கிரஸ் தமிழகத்தில் பலமான கட்சியான திமுகவுடன் சேர்ந்து தொடர்ந்து செயல்படும்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையை ஏற்க சிக்னல் காட்டியுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் செயல்பட விசிக உள்ளிட்ட கட்சிகள் விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார்.பின்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த…
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில்…