நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமை…!பச்சைக்கொடி காட்டிய கமல்ஹாசன் …!அடுத்து உருவாகும் கூட்டணி …!திருநாவுக்கரசர் பகீர் தகவல்

Default Image

காங்கிரஸ்  தமிழகத்தில் பலமான கட்சியான திமுகவுடன் சேர்ந்து தொடர்ந்து செயல்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Image result for congress dmk
கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி  பெங்களூருவில் சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் சென்றார்.இதன் பின்னர் பேசிய அவர் ,காங்கிரஸ்  திமுக கூட்டணியிலிருந்து விலகி எங்களை அணுகினால் கூட்டணியில் சேர்வது குறித்து முடிவெடுப்போம்.நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்காது என்று கூறினார்.
Image result for தினகரன்
இதற்கு பதில் கூறிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்,காங்கிரஸ்  தமிழகத்தில் பலமான கட்சியான திமுகவுடன் சேர்ந்து தொடர்ந்து செயல்படும்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையை ஏற்க சிக்னல் காட்டியுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் தலைமையில் செயல்பட விசிக உள்ளிட்ட கட்சிகள் விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.
Related image
சமீபத்தில் கமல்ஹாசன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார்.பின்னர்  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்