நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி…!
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்குள் மரம் வெட்டி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,தாமிரபரணி புஷ்கரணி விழா அரசு விழாவாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.ஆறுகளில் கழிவுகள் கலக்கப்படுவது தடுக்கும் வகையில் கழிவுகளைப் பிரித்து முறைப்படுத்தி கலப்பதை தடுத்து நிறுத்தப்படும் .தினகரன் வானத்தை அண்ணார்ந்து பார்த்து பகல் கனவு காண்கிறார்.அவரது ஒரு வார்த்தையும் உண்மை இல்லை என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.திருவாரூர் முதல் திருப்பரங்குன்றம் வரை அதிமுக வெற்றி பெறும்.இந்த தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போய்விடும்.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி ஏற்படும் என்றும் கூறியுள்ளார் .