மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை ,நாடாளுமன்றத்தில் இருந்து கனிமொழியை வெளியேற்ற எம்.பி.க்களை ராஜினாமா செய்ய சொல்வது ஸ்டாலின் சித்து விளையாட்டுகளில் ஒன்று என கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது, காவிரி விவகாரம் தொடர்பாக தமிழர்களின் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறோம். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராடியும் மத்திய அரசு செவிசாய்க்க மறுக்கிறது.
நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க்களுக்கும் மேல் இருந்தால்தான் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும். 37 எம்.பி.க்களைக் கொண்ட அதிமுகவால் எப்படி தீர்மானம் கொண்டு வர முடியும்? காவிரிக்காக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் நாடாளமன்றத்தில் காங்கிரஸ் ஆதரிக்குமா? சோனியா மற்றும் ராகுலிடம் பேசி ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.
அதிமுக எம்எபிக்களை பதவி விலகச் சொல்வது ஸ்டாலினின் சித்து விளையாட்டுகளில் ஒன்று.நாடாளுமன்றத்தில் இருந்து கனிமொழியை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவும், அரசியல் சித்து விளையாட்டுக்காகவும் எம்.பி.க்கள் ராஜினாமா குறித்து ஸ்டாலின் பேசுகிறார். பாஜகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்படவில்லை என்றும் ஸ்டாலின் புகாருக்கு தம்பிதுரை விளக்கம் அளித்தார்.
தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் ஆந்திர அரசுக்கு ஆதரவாக செயல்படுமாறு ஸ்டாலின் கூறுகிறார்.ஆந்திராவில் செம்மரம் வெட்டவந்தவர்கள் என்று கூறி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இதனை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்டுகொள்ளவில்லை.தமிழர்களை சுட்டுக் கொல்வது உட்பட தமிழகத்தை தொடர்ந்து வஞசிக்கும் ஆந்திர அரசுக்கு ஸ்டாலின் ஆதரவு அளிக்கச் சொல்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…