நாங்கள் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும்!
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது , தி.மு-க நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக உடைகிறபோது, அதைப் பயன்படுத்தி கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வரக்கூடாது என திமுக தலைவர் கருணாநிதி தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எம்.எல்.ஏக்களுக்கு மாதம்தோறும் படி அளக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.