நஷ்டத்தை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும்-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், “பேருந்துகள் கடும் இழப்பை சந்தித்துள்ளது. பேருந்துகள் மக்களுடையது, இதை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்ற மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் பேருந்து கட்டணம் குறைவு என்று கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து, நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் என்றும் வேறு வழியில்லை என்றும் தெரிவித்துள்ளார். பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் கடும் கண்டம் தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் உட்பட பல அமைச்சர்கள் பலர் இது குறித்து நியாயப்படுத்தி பேசி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது