நள்ளிரவில் ஜெ வீட்டில் நடந்த சோதனை : T.T.V.தினகரன் பேட்டி
நேற்று நள்ளிரவில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா இருந்த போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடைபெற்றது, அதில் சில லேப்டப்கள், பென்டிரைவ்கள், ஜெயலலிதாவிற்கு வந்த பல கடிதங்களை பறிமுதல் செய்துள்ளதாக T.T.V.தினகரன் அவர்கள் தூத்துக்குடியில் பேட்டியில் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,
இந்நிலையில் இது குறித்து T.T.V.தினகரன் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ரூமிற்கு சோதனையிட வேண்டுமென கூறினார், நான் வாரன்ட் இருக்கிறதா என கேட்டேன், அவர்கள் இல்லை என கூறியதால் சோதனையிட அனுமதிக்க வில்லை, உடன் திவாகரன் இருந்தார். மேலும் வீட்டில் இருந்த பழைய லேப்டப்கள், பென்டிரைவ்கள், ஜெயலலிதாவிற்கு வந்திருந்த கடிதங்களை எடுத்து சென்றனர்.’ என கூறினார்.
மேலும், ‘மரணம் என்பது ஒருமுறைதான், அதனால் நாங்கள் எதைக்கண்டும் பயப்பட மாட்டோம், அம்மா வீட்டை சோதனையிட்ட போதும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏதும் கூரமாளிருபது ஏன்?, எனவும் இதற்க்கு அவர்கள் பதில் கூறியே க வேண்டும் அவர்கள் ஜெலலிதாவின் ஆன்மாவிற்கு துரோகம் இழைத்துவிட்டனர்’ எனவும் கூறினார்.
வருமான வரித்துறையினர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்பட்டது, பின் அவரது அறையில் சோதனை நடத்தப்பட்டது. சசிகலாவின் அறையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.