நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி பைக்ரேசில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் ரோந்து வாகனத்தில் துரத்திச் சென்றும், பேரிகார்டுகள் அமைத்தும் சுற்றிவளைத்து பிடித்தனர்.
சென்னையின் பல்வேறு இடங்களில் பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் பைக்ரேஸ்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் சாலை ஓரத்தில் இருசக்கர வாகனங்களில் காத்திருந்த எராளமானவர்கள் திரைப்படக் காட்சிகள் போன்று ஒரே நேரத்தில் பைக் ரேசுக்கு புறப்பட்டனர்.
போலீசார் அவர்களை துரத்தியதையடுத்து பலர் தப்பியோடினர். போலீசார் தங்கள் ரோந்து வாகனத்தில் பைக் ரேசில் ஈடுபட்டவர்களை துரத்திச் சென்றனர்.
கடற்கரைச் சாலையில் போலீசாரின் கட்டுப்பாடுகளை அடுத்து ஆர்.கே.சாலையில் அவர்கள் பைக்ரேசில் ஈடுபட்டனர்
சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசங்களிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
இதே போன்று அடையாறு திரு.வி.க. மேம்பாலப் பகுதியில் பைக் ரேசில் ஈடுபட்டவர்கள் போலீசாரைக் கண்டதும் எதிர் மார்க்கத்துக்குச் சென்று தவறான பாதைகளில் தப்பினர்.
அவர்களில் 3 பேரை மட்டும் பேரிகார்டுகளை அமைத்து போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
பைக்ரேசில் ஈடுபட்டதற்காக நேற்று முன் தினம் 6 பேர் பிடிபட்ட நிலையில் நேற்றும் இளைஞர்கள் பைக்ரேஸ் மற்றும் சாகசஙகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…