நற்செய்தி : குடிமகன்களுக்கு மட்டும் : நியூ இயர் ஸ்பெசல்
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவார்களோ இல்லையோ மது விற்பனைக்கு புது புது டார்கெட் ஒவ்வொரு பண்டிகைக்கும் வைத்து நன்றாக கல்லா கட்டுகிறது. டார்கெட் வைத்து அதனையும் சாதித்து காட்டுகிறது.
தற்போது இந்த மாதத்தில் கிருஸ்துமஸ், புத்தாண்டு தினத்தில் அதிகமான சரக்குகள் விற்க டார்கெட் கொடுக்கபட்டுள்ளது. புத்தாண்டுக்கு எப்போதும் மதுபானங்கள் அதிகமாக விற்கபடுவதால், இந்த டார்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகளில் 15 நாட்களுக்கு தேவையான சரக்குகள் இருப்பு வைக்க டாஸ்மாக் கடைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு தேவையான மதுபானங்கள் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.