நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது உள்ளிட்ட 7 வழக்குகள் மீண்டும் ஒத்திவைப்பு
தமிழக சட்டப்பேரவையில் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி மற்றும் முதலமைச்சர் தரப்பில் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன்,ஆகிய இருவரும் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை நீதிபதியின் முன்வைத்தனர்.
மேலும், திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது மற்றும் தடையை நீக்க வேண்டும் எனும் இரு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்குகளை நவம்பர் 20 அன்று, ஒத்தி வைத்தனர்.அதன்படி இன்று, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் விசாரணைக்கு வந்தது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, டிடிவி தரப்பு வாதங்களை கேட்ட பின்னர் இந்த வழக்கு மீதான விசாரணையை வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.