நேற்று நள்ளிரவில் நடிகர் விஜய் அறிவிக்காமலேயே தூத்துக்குடி சென்றுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நடிகர் விஜய் நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்லோனின் ஜான்சி உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய் ஆறுதல் தெரிவித்து மட்டுமல்லாமல் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார். பலியானோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : புஷ்பா 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படம் வெளியாக…
சென்னை : நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (11-11-2024) காலை 0830…
மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. அசாமின் எல்லையோர மாவட்டத்தில் குக்கி தீவிரவாதிகள்…
சென்னை -சிக்கல் சிங்கார வேலன் கோவிலின் சிறப்புகளையும் அதிசயங்களையும் இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம். ஆலயம் அமைந்துள்ள இடம்…
கேரளா : வயநாடு தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சகோதரி…
சென்னை : கங்குவா படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பல…