“நடிகர் விஜய் காயம் ” “போலீஸ் தடியடி” மண்டபத்தை சூறையாடிய ரசிகர்கள்..!!

Published by
Dinasuvadu desk
புதுச்சேரியில் நடிகர் விஜய் பங்கேற்றதிருமண விழாவில் ரசிகர்கள் கூட்டம்நெருக்கியடித்து கலாட்டாவில் ஈடுபட்டதால்மண்டப நாற்காலிகள் சூறையாடப்பட்டன.போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களைஅப்புறப்படுத்தி விஜயை பத்திரமாகஅனுப்பிவைத்தனர்.

விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த். புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவார் என்று கூறப்பட்டதால், ஏராளமான விஜய் ரசிகர்கள் கல்யாண மண்டபத்துக்கு படையெடுத்தனர். இதனால் திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், மேடையை நோக்கி முன்னேறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன், கூட்ட நெரிசல்களைத் தாண்டி மண்டபத்துக்கு வந்தார். இதையடுத்து மணமேடை வந்த விஜய், மணமக்களை வாழ்த்தி, பரிசு வழங்கினார். அப்போதும் பலர் நெருக்கியடித்ததால், விஜய்யும், அவரது மனைவியும் செய்வது அறியாது திகைத்தனர். பவுன்ஸர்கள் எனப்படும் பாதுகாப்பு வீரர்களும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

காலில் லேசான காயமடைந்த விஜய், மனைவி சங்கீதாவின் தோளில் கைபோட்டு, பெரும் சிரமத்துக்கு இடையே மண்டபத்தில் இருந்து வெளியேறினார். மண்டபத்துக்கு வெளியேயும் ரசிகர்கள் கலாட்டாவில் ஈடுபட்டதால் போலீஸார் தடியடி நடத்தி, அவரை பத்திரமாக காரில் அனுப்பிவைத்தனர்.
ரசிகர்களின் நெருக்குதல் காரணமாக மண்டபம் அலங்கோலமாக காட்சியளித்தது. சேர்கள் உடைக்கப்பட்டு, காலணிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.

DINASUVADU

Recent Posts

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…

6 hours ago

பரபரக்கும் ஈரோடு இடைதேர்தல்! 3 பறக்கும் படை தயார்… ரூ.50,000-க்கு மேல் ஆவணங்கள் கட்டாயம்…

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…

7 hours ago

நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.!

நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…

9 hours ago

அதிர்ச்சி காட்சி… கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!!

துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…

9 hours ago

ஈரோடு இடைத்தேர்தல் : திமுகவுக்கு சிபிம் ‘முதல்’ ஆதரவு!

சென்னை :  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…

9 hours ago

இனிமேல் சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்.. இந்த பூண்டு பொடியே போதும்..!

சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…

9 hours ago