ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.விஜய் பிறந்த 21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது. சர்கார் படத்தின் முதல் தோற்றத்தில் (FIRST LOOK), விஜய் புகைப்பிடிக்கும் காட்சி உள்ளது.
இந்த படத்தின் முதல் தோற்றத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் பொதுச்சுகாதாரத்துறை இயக்குனர் முருகதாஸ்,நடிகர் விஜய்,படத்தின் தயாரிப்பாளரான சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஆகியோருக்கு புகை பிடிக்கும் காட்சி இடம்பெற்றதால் நோட்டீஸ் அனுப்பியது.மேலும் அந்த காட்சியை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் கோரிக்கை விடுத்தது.
பின்னர் சர்காரில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.
பின்னர் அடையாறு புற்று நோய் மருத்துவ மையம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதற்கு ரூ.10 கோடியை அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்திற்கு இழப்பீடாக வழங்கக்கோரி வழக்கை நீதிமன்றம் விசாரித்தது.பின்னர் சர்கார் திரைப்பட வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் நோட்டீஸ் அனுப்பியது.
விஜய்க்கு ஆதரவாக நடிகர் சிம்புவின் தந்தை விஜய.டி.ராஜேந்தர் புகை பிடிக்கும் காட்சி குறித்து கூறுகையில்,நடிகர்களுக்கு தனி மனித ஒழுக்கம் அவசியம். ஏன் விஜய் படத்துக்கு மட்டும் எதிர்ப்பு கிளம்புகிறது.விஜய்யை தமிழன் என்பதால் எதிர்க்கிறார்களா? புகையிலையை ஒழிக்காமல் புகைப்பிடிக்கும் காட்சிகளை எதிர்க்கின்றனர். புகையிலையை முழுமையாக அரசு தடை செய்ய ஏன் முழு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது என்றும் கூறினார்.
இந்நிலையில் பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், நடிகர் விஜய் புற்று நோயால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே புகை பிடிக்க வேண்டாம் என்று கூறினேன் என்று விளக்கம் அளித்தார்.நடிகர் விஜய் புற்று நோயால் பாதிக்கப்படக்கூடாது என்பதாலேயே தான் எதிர்ப்ப தெரிவித்த காரணமும் இது தான் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…