நடிகர் ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்கு?மனிதனுக்கு போராட உரிமை இல்லையா?சரத்குமார் ஆவேசம்
மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய, நடிகர் ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மனிதனுக்கு போராட உரிமை இல்லையா? தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினி கூறியதற்கு சரத்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நேற்று தூத்துக்குடியில் ரஜினிகாந்த்:
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்திக்கிறார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார்.
நேற்று நலம் விசாரித்த பின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறியது:
தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் .சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை, சமூக விரோதிகளே என்று ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் எண்ணம் நிர்வாகத்திற்கு வரவே கூடாது.போராட்டம் நடத்தும் போது பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்களை சிலர் தூண்டிவிடுகின்றனர் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சமூகவிரோதிகள் உள்ளே வந்ததை கண்டுபிடிக்க தவறியது உளவுத்துறையின் தவறு
போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் சமூகவிரோதிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். தொடர்ந்து போராட்டம் நடைபெற்றால் தமிழகத்தில் எப்படி தொழில்துறை வளர்ச்சி அடையும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போல் இனி நிகழக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி என்றும் அறிவித்துள்ளார்.முதற்கட்டமாக 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.