மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மிக ஞானி நடிகர் ரஜினி என விமர்சித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மிக ஞானி நடிகர் ரஜினி என விமர்சித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
“உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என நம்புகிறோம். அதற்காக நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அழுத்தம் தருகின்றனர். உச்சநீதிமன்றம் வழங்கிய 6 மாத கால அவகாசம் இன்னும் முடியவில்லை. காவிரி விவகாரத்தில் யூகங்களுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது.
பாஜகவுடன் அதிமுக ஆதரவும் இல்லை, கூட்டணியும் இல்லை என முதல்வர் தெளிவாக கூறியிருக்கிறார். குடும்ப சூழ்நிலை, தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாகவே காவலர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் எண்ணம். ஆனால், உள்ளாட்சி அமைப்பு எல்லை வரையறை பணிகள் இன்னும் முடியவில்லை. அதுதொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்படும். அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மிக ஞானியாக நடிகர் ரஜினி இருக்கிறார் ”என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…