நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவித்ததற்காக அரசுக்கு நன்றி!பிரபு
நடிகர் சிவாஜி கணேசனை தங்கள் குடும்பத்தில் ஒருவராக லட்சக்கணக்கானோர் கருதுகின்றனர் நடிகர் சிவாஜி கணேசன் மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றி என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவித்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் பிரபு கூறினார்.
முன்னதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110 இன் கீழ் வருவாய் பேரிடர் மேலாண்மை துறைகள் குறித்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
நடிகர் சிவாஜிகணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் .
அக்டோபர் 1 ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.