நடிகர் சிவாஜி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி!பாரதிராஜா
நடிகர் சிவாஜி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் தமிழக அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சிவாஜி கணேசனை நினைவூட்டும் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பாரதிராஜா கூறியுள்ளார்.