சென்னை ,
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சித்தார்த்(வயது 32). , இவரது மனைவி ஸ்மிரிஜா(35) இவர்கள் இருவரும் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் பூந்தமல்லியை அடுத்துள்ள மதுரவாயலை அருகே அடையாளம் பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.இவபர்களுக்கு திருமண ஆகி 3 ஆண்டுகளுக்கு ஆகின்றது. இந்த தம்பதிகள் விளம்பரம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான கார்டுகளை டிசைன் செய்து விற்பனை செய்வதை வீட்டில் இருந்தே செய்து வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் இருவரும் ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளனர்.வரும் வழியில் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இரவு வீட்டிற்கு வந்தவுடன் ஸ்மிரிஜா கோபித்துக்கொண்டு அவரது அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார். சித்தார்த் வீட்டின் ஹாலில் படுத்துக்கொண்டார்.இந்நிலையில் காலை சித்தார்த் ஸ்மிரிஜா அறையில் இருந்து நேரமாகியும் வெளியே வரவில்லை என்பதால் பதறி போய் கதவை தட்டினார்.ஆனால் ஸ்மிரிஜா கதவை திறக்க வில்லை .
இதனால் அதிர்ச்சியடைந்த சித்தார்த் மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். அப்போது ஸ்மிரிஜா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்மிரிஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், சித்தார்த் ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார். அவருக்கும், ஸ்மிரிஜாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.அது மட்டுமில்லாமல் ஸ்மிரிஜா தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும் மதுரவாயல் போலீசார் விசாரணை செய்துகொண்டு இருக்கிறார்கள்….
DINASUVADU
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…