நகை வியாபாரிகள் சங்கத்தினர் தலைமை தேர்தல் அதிகாரியுடன் சந்திப்பு…..
- நகை வியாபாரிகள் சங்கத்தினர் தலைமை தேர்தல் அதிகாரியுடன் சந்திப்பு.
தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, பல முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, காவல்துறையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆதாரம் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் நகையை பறிமுதல் செய்கின்றனர்.
இந்நிலையில், நகை வியாபாரிகள் சங்கத்தினர் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அவர்கள் பேசியதாவது, உரிய ஆவணங்கள் இருந்தால் நகைகளை உடனடியாக விடுவிக்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக, அச்சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி உள்ளிட்டோர், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்திலால், பல இடங்களில் நகை வியாபாரிகள் உரிய ஆவணங்கள் வைத்திருந்தும், அதுபற்றி பல தேர்தல் அலுவலர்களுக்கு புரியாததால், உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி பறிமுதல் செய்துவிடுவதாக, ஜெயந்திலால் கூறினார்.