நகைச்சுவைக்கு நடிகர் வடிவேலு இல்லை கவலை வேண்டாம்..!அதற்கு தமிழக அமைச்சர்கள்போதும் ..!டிடிவி.தினகரன்
நகைச்சுவை நடிகர் வடிவேல் இல்லை என்ற நிலையை தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் .
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் டி.டி.வி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர்,மற்ற கட்சிகள் அனைத்து கூட்டத்திற்கு அனுமதி தந்தவர்கள் குட்டி எதிரி டிடிவி.தினகரனுக்கு மட்டும் ஏன் பயந்து அனுமதி தர மறுத்தீர்கள்.நாங்கள் யார் என்று தமிழகத்தில் எங்களை அடையாளம் காட்டிய முதல்வர் பழனிசாமி மற்றும் அவர்களது சகோதர்களுக்கு நன்றி.கலைஞர் மரணத்திற்கு பிறகு திமுக செயல்தலைவர் ஸ்டாலின மெரினாவில் இடம் தாரத போது அவர்கள் நேராக நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும்.மக்கள் ஏற்றுக்கொள்ளமுடியாத முதல்வரிடம் ஏன் சென்றார்.மணல் கொள்ளையால மட்டுமே ஆட்சி நடைபெறுகிறது என்பது மக்களுக்கு தெரிகிறது. எந்த தேர்தலாக இருந்தாலும் அமமுக தான் வெற்றி பெறும். வெற்றி பெற்று அம்மாவிற்கு காணிக்கையாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார் .
DINASUVADU