வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ்,இபிஎஸ் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அதன்படி,சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமித்தல், சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் அதிமுக சார்பில் ஆங்காங்கே வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தல் உள்ளிட்ட பணிகளை முனைப்போடு மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து இப்பணியை முடித்து, அதன் விபரங்களை தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்குமாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும்,இது தொடர்பாக அவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஆற்ற வேண்டிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள்:
01.01.2022-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு,புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களை சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் செய்வதற்கான பணிகள் பின்வரும் கால அட்டவணைப்படி நடைபெற உள்ளன.
மிகவும் மமுக்கியத்துவம் வாய்ந்த இப்பணிகளில் அதிமுக நிர்வாகிகளும்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், குறிப்பாக, கழகத்தின் சார்பில் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கென்று நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை முகவர்களும் (BLA-2) தனிக் கவனம் செலுத்தி,
தேவையான படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து,அதனை சம்பந்தப்பட்ட முகாம்களில் வழங்கி இப்பணியை முழுமையாகச் செய்து முடித்திட வேண்டும். அதே போல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில், அத்துமீறல்கள் ஏதேனும் இருப்பதாகத் தெரிய வந்தால், உடனுக்குடன் அது தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து உரிய தீர்வு காண வேண்டும்.
அதிமுக சார்பில் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படாத வாக்குச் சாவடிகளில், வாக்குச் சாவடி நிலை முகவர்களை உடனடியாக நியமித்து, அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் வாக்குச் சாவடி நிலை முகவர்களை நியமித்தல், சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் கழகத்தின் சார்பில் ஆங்காங்கே வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தல் உள்ளிட்ட பணிகளை முனைப்போடு மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து இப்பணியை முடித்து, அதன் விபரங்களை தலைமைக் கழகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…