நகராட்சி தலைவர் தேர்தலில் விசிக தோல்வி; திமுக வேட்பாளர் வெற்றி..!
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர். கூட்டணி கட்சிகளுக்கு மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்களை நேற்று திமுக ஒதுக்கீடு செய்தது.
திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிகவுக்கு கடலூர் துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், 2 நகராட்சி தலைவர், 3 பேரூராட்சி தலைவர் பதவி மற்றும் 3 நகராட்சி துணைத்தலைவர், 7 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இன்று மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் விசிகவிற்கு நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், விசிக வேட்பாளரை எதிர்த்து போட்டியாக மனு செய்த திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.