தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டுதான் என்பதை உணர வேண்டும்! மு.க.ஸ்டாலின்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,பிளஸ்டூ தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நம்பிக்கையிழக்காமல் கடினமாக உழைத்து உயர்கல்விப் பாதையில் ஊக்கத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் கிஞ்சிற்றும் நம்பிக்கையிழக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.
தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டுதான் என்பதை உணர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அடுத்து வரும் வாய்ப்பினைப் பயன்படுத்தி, மேலும் கடினமாக உழைத்து, வெற்றிபெற்று உயர்கல்வி பெறும் பாதையில் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பயணிக்க வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.