தோப்பூரில் எய்ம்ஸ் – தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி அமைச்சர் கடம்பூர் ராஜு…!!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து விரைவில் மேல்முறையீடு செய்து நியாயமான தீர்ப்பு பெறப்படும் என தெரிவித்தார்.