தோனி,ரெய்னா யார் வெளியே செல்லும்போது அசம்பாவிதம் நேரிட்டால் தாங்கள் பொறுப்பு அல்ல…!அவங்களுக்கு என்ன வேணும்னாலும் நடக்கலாம் ..!
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் , ஐ.பி.எல். போட்டிகளுக்காக சென்னையில் தங்கியிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்லும்போது அசம்பாவிதம் நேரிட்டால் தாங்கள் பொறுப்பு அல்ல என எச்சரித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டால் அதை தடுத்து நிறுத்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.
ஐபிஎல்லுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைவரும் வானில் கறுப்பு பலூன்களை பறக்கவிடுமாறு கேட்டுக்கொண்ட வேல்முருகன் அடையாளமாக சேப்பாக்கம் மைதானம் முன்பு கறுப்பு பலூன்களை பறக்கவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.