தோட்டக்கலைப் பயிர்கள் ரூ.34 கோடி ஒதுக்கீட்டில் விரிவாக்கம் – அமைச்சர் துரைக்கண்ணு..!
விவசாயிகளுக்கு லாபம் தரும் தோட்டக்கலைப் பயிர்கள் 34 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் விரிவாக்கம் செய்யப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வேளாண்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் துரைக்கண்ணு வெளியிட்டார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், ரசாயனமற்ற இயற்கை வேளாண்மையைப் பரவலாக்க 5 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். கிராமப்புற இளைஞர்களை தோட்டக்கலையில் ஈடுபடுத்தும் வகையில் தோட்டக்கலை அறிவியல் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 2018 – 2019 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் 100 நெல் ரகம் ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பிரபலப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.