தொழிற்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்க வலியுறுத்தல்..,
தேசிய துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹிர்மானி நேற்று வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, சென்னை, கிருஷ்ணகிரி என 5 மாவட்டங்களில் முன்மாதிரி திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் துப்புரவு தொழிலாளருக்கு மாத ஊதியம் ரூ.15 ஆயிரம், குடியிருப்பு, சுகாதாரம், காப்பீடு, குழந்தைகளின் கல்வி போன்ற அடிப்படை தேவைகளை மேற்கொள்வதாகும். இந்த திட்டம் வரும் 2020ம் ஆண்டு நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைவாக காட்டி மோசடி செய்கின்றனர். இதை தடுக்க அனைத்து தொழிற்சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். அடுத்த ஆய்வின்போது மேற்கண்ட பணிகளை நிறைவேற்றி இருக்க வேண்டும் என்று ஜெகதீஷ் ஹிர்மானி கூறினார்.