தொடர் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணா நகர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளிப் பொருட்களை குறிவைத்து திருடுவது அதிகரித்து வந்தன.
இதுகுறித்த புகாரில், அண்ணாநகர் மற்றும் நொளம்பூர் போலிசார் அண்மையில் முருகன், கோவன் ஆகிய இருவரை கைது செய்தனர். விசாரணையில், கொள்ளையடிக்கும் நகைகளை புதுச்சேரியை சேர்ந்த ரகுராம் என்பவருடன் சேர்ந்து உருக்கி கட்டிகளாக மாற்றி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. வெள்ளிப்பொருட்களை எளிதாக விற்க முடியும் என்பதால், அதை அதிகளவில் திருடியுள்ளனர்.
இதையடுத்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார், கோயம்பேட்டில் ரகுராமை கைது செய்துள்ளனர். ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பு வெள்ளி கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ரகுராம் மீது கேரளா, கர்நாடா மாநிலங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் அப்பா விஷ்வநாத், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னாள் இந்திய…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை நடந்த கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மருத்துவமனையில்…
சென்னை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி…